மாவட்ட செய்திகள்

நிலப்பிரச்சினையில் இருதரப்பினர் இடையே மோதல்; 2 பேர் கைது + "||" + Conflict between the two sides over the land issue; 2 people arrested

நிலப்பிரச்சினையில் இருதரப்பினர் இடையே மோதல்; 2 பேர் கைது

நிலப்பிரச்சினையில் இருதரப்பினர் இடையே மோதல்; 2 பேர் கைது
வேதாரண்யம் அருகே நிலப்பிரச்சினையில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேதாரண்யம்,

வேதாரண்யத்தை அடுத்த நெய்விளக்கு கிராமத்தை சேர்ந்த வேதையன் மனைவி சரஸ்வதி (வயது 42). வேதையனின் அண்ணன் சுப்பிரமணியனின் மகள் சித்ரா (38). சித்ராவை ஆயக்காரன்புலத்தை சேர்ந்த தனபாலன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். ஆனால் அவர் நெய்விளக்கில் உள்ள தனது தந்தை வீட்டில் தங்கி உள்ளார். இந்தநிலையில் வேதையன், சுப்பிரமணியனுக்கு சொந்தமான சொத்துகளில் சில பிரிக்கப்பட்டும், பிரிக்காமலும் உள்ளது.

சம்பவத்தன்று சித்ரா ஒரு வயலில் நெல் விதை தெளிக்க முயன்றார். இதை பார்த்த சரஸ்வதி, சித்ராவை தடுத்துள்ளார். இதனால் இருகுடும்பத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் படுகாயமடைந்த சரஸ்வதி, சித்ரா ஆகியோர் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சரஸ்வதி, சித்ரா ஆகியோர் தனித்தனியாக வேதாரண்யம் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நெய்விளக்கு கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (72), அரவிந்தன் (24) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருச்சியில் சாலையோரம் சுற்றித்திரிந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் 2 பேர் கைது
திருச்சியில் சாலையோரம் சுற்றித்திரிந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
2. மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
அரியலூர் மாவட்டம், தளவாய் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
3. சாராய ஊறல் அழிப்பு; 2 பேர் கைது
சிவகிரி அருகே தனியாருக்கு சொந்தமான தோப்புகளில் சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி சம்பந்தப்பட்ட நபரை கைது செய்தனர்.
4. படப்பை அருகே, சாராயம் விற்பனை செய்த 2 பேர் கைது
படப்பை அருகே சாராயம் விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.