மாவட்ட செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்யக்கோரி - திருக்குவளையில், தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் + "||" + Anna University Vice Chancellor Demand dismissal of Surappa - DMK workers protest in Thirukuvalai

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்யக்கோரி - திருக்குவளையில், தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்யக்கோரி - திருக்குவளையில், தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்யக்கோரி திருக்குவளையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேளாங்கண்ணி,

அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கல்லூரி முன்பு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தை கொண்டு செல்ல முயற்சிக்கும் துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்யக்கோரியும், மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும் வேளாங்கண்ணி அருகே திருக்குவளையில் தி.மு.க. நாகை வடக்கு, தெற்கு, திருவாரூர், காரைக்கால் மாவட்ட இளைஞரணி மற்றும் மாணவரணி அமைப்பு சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தி.மு.க. மாணவரணி துணை செயலாளர் மன்னைசோழராஜன் தலைமை தாங்கினார். நாகை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மலர்வன்னன், திருவாரூர் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் அமுதா சந்திரசேகரன், இளைஞர் அணி அமைப்பாளர் இளையராஜா, நாகை வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மகாஅலெக்சாண்டர், புதுச்சேரி மாநில இளைஞரணி மாநில அமைப்பாளர் முகமது ரிபாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ஏராளமான தி.மு.க.வினர் கலந்துகொண்டு அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கார்த்தி, முத்துகிருஷ்ணன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் பாலா, டேனியல் சக்தியா மற்றும் தி.மு.க.வினர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் - 3 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை கண்டித்து தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணியினர் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், மனோ தங்கராஜ், ஆஸ்டின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
2. பயிர்க்காப்பீட்டு தொகையை வழங்கக்கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
பயிர்க்காப்பீட்டு தொகையை வழங்கக் கோரி திருத்துறைப்பூண்டியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சிவகாசியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தஞ்சை மாவட்டத்தில் 1,500 இடங்களில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தஞ்சை மாவட்டத்தில் 1,500 இடங்களில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. பொன்மலை ரெயில்வே பணிமனை முன்பு வடமாநில தொழிலாளர்கள் நியமனத்தை ரத்து செய்யக்கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
பொன்மலை ரெயில்வே பணிமனை முன்பு வடமாநில தொழிலாளர்கள் நியமனத்தை ரத்து செய்யக்கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.