ஜம்மு காஷ்மீரில் இறந்த ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு அமைச்சர் ராஜலட்சுமி ஆறுதல்


ஜம்மு காஷ்மீரில் இறந்த ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு அமைச்சர் ராஜலட்சுமி ஆறுதல்
x
தினத்தந்தி 17 Oct 2020 5:16 AM IST (Updated: 17 Oct 2020 5:16 AM IST)
t-max-icont-min-icon

அமைச்சர் ராஜலட்சுமி நேற்று ஆயாள்பட்டிக்கு சென்று முல்லைராஜின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.

சங்கரன்கோவில்,

பனவடலிசத்திரம் அருகே ஆயாள்பட்டியைச் சேர்ந்தவர் துரைபாண்டி மகன் முல்லைராஜ் (வயது 27). ராணுவ வீரரான இவர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றியபோது துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்தார். அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் அமைச்சர் ராஜலட்சுமி நேற்று ஆயாள்பட்டிக்கு சென்று முல்லைராஜின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். அப்போது முல்லைராஜின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று குடும்பத்தினர் அமைச்சர் ராஜலட்சுமியிடம் மனு வழங்கினர். மனுவை பெற்று கொண்ட அவர், இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார். தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story