“திரையரங்குகள் திறப்பு குறித்து ஒரு வாரத்தில் நல்ல முடிவு வரும்” அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
“திரையரங்குகளை திறப்பது குறித்து ஒரு வாரத்தில் நல்ல முடிவு வரும்“ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
கோவில்பட்டி,
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘800’ என்ற திரைப்படத்தில் நடிப்பது பற்றி நடிகர் விஜய் சேதுபதி யோசித்து பார்க்க வேண்டும். அவர், ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும்.
திரைப்படத்தில் நடிப்பது தனிப்பட்ட உரிமை என்றாலும், நடிகர் விஜய் சேதுபதி தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். அவர் புரிந்து கொள்வார் என்று நினைக்கிறேன். இது அவரது எதிர்காலத்துக்கு நல்லது.
திரையரங்குகள்
திரைப்படத்துறையினருக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி உள்ளது. கேளிக்கை வரி குறைக்கப்பட்டு இருக்கிறது. திரையரங்கு டிக்கெட் கட்டணம் வரைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
திரையரங்குகளை மீண்டும் திறப்பது, அங்கு கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுவது குறித்து திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகளுடன் விரைவில் ஆலோசனை நடத்தப்படும். திரையரங்குகளை மீண்டும் திறப்பது குறித்து ஒரு வாரத்துக்குள் நல்ல முடிவு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story