மாவட்ட செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் 2 பெண்கள் உள்பட 5 பேர் கொரோனாவுக்கு பலி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கியது + "||" + In Erode district, 5 people, including 2 women, were killed in the corona near 9,000

ஈரோடு மாவட்டத்தில் 2 பெண்கள் உள்பட 5 பேர் கொரோனாவுக்கு பலி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கியது

ஈரோடு மாவட்டத்தில் 2 பெண்கள் உள்பட 5 பேர் கொரோனாவுக்கு பலி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கியது
ஈரோடு மாவட்டத்தில் 2 பெண்கள் உள்பட 5 பேர் கொரோனாவுக்கு பலி ஆனார்கள். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மாநகர் பகுதியில் கொரோனா வைரசின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. மாவட்டம் முழுவதும் தினமும் 100-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.


அதன்படி பொதுமக்கள் வெளியில் வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத பொதுமக்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. எனினும் மாவட்டத்தில் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை.

5 பேர் பலி

இதற்கிடையில் மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்த 25 வயது பெண் ஒருவருக்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த 14-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த பெண் இறந்தார்.

இதேபோல் ஈரோடு பெருமாள் நகர் பகுதியை சேர்ந்த 38 வயது ஆண் காய்ச்சல் மற்றும் சளி தொல்லையால் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த 12-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும் ஈரோடு நகராட்சி பகுதியை சேர்ந்த 75 வயது முதியவர் கடந்த 14-ந்தேதியும், பவானி பகுதியை சேர்ந்த 72 வயது பெண் நேற்று முன்தினமும், பவானி ஜம்பை பகுதியை சேர்ந்த 78 வயது முதியவர் கடந்த 14-ந் தேதியும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்தது.

138 பேர்

மேலும் ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக 138 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 904 ஆக உயர்ந்து உள்ளது.

அதேநேரத்தில் நேற்று மாவட்டம் முழுவதும் மொத்தம் 55 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 7 ஆயிரத்து 699 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர். தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,094 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் கொரோனா தொற்று 9 ஆயிரத்தை நெருங்கி வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 144 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 144 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.
2. கொரோனாவினால் பாதிக்கப்பட்டு 30 ஆயிரம் பேர் குணமடைந்தனர்
புதுவையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 30 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.
3. கொரோனா உயிரிழப்பில் தமிழகத்தை தாண்டிய கர்நாடகம் பலி எண்ணிக்கை 11 ஆயிரத்தை நெருங்கியது
கொரோனா உயிரிழப்பில் தமிழகத்தை கர்நாடகம் தாண்டி உள்ளது. மாநிலத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 11 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
4. மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலேக்கு கொரோனா மும்பை ஆஸ்பத்திரியில் அனுமதி
மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலேக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, அவர் மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
5. மத்திய மந்திரிக்கு கொரோனா: நடிகை பாயல் கோஷ் தனிமைப்படுத்தி கொண்டார்
மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலேக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதை தொடர்ந்து, அவருடன் கட்சியில் இணையும் விழாவில் கலந்து கொண்ட நடிகை பாயல் கோஷ் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.