மாவட்ட செய்திகள்

மத மோதலை தூண்டும் கருத்து நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு - போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவு + "||" + The idea of inciting religious conflict Case filed against actress Kangana Ranaut - Court order to police

மத மோதலை தூண்டும் கருத்து நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு - போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவு

மத மோதலை தூண்டும் கருத்து நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு - போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவு
நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த போலீசாருக்கு மும்பை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மும்பை,

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையை அடுத்து நடிகை கங்கனா ரணாவத் இந்தி திரையுலகம் மீது பல குற்றச்சாட்டுகளை சமூகவலைதளங்களில் தெரிவித்து வருகிறார். இதேபோல அவர் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என கூறியது, வேளாண் மசோதாவை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை பயங்கரவாதிகள் என தெரிவித்து இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தன. இதேபோல நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி ரன்கோலி ஆகியோர் இரு மதத்தினர் இடையே மோதலை தூண்டிவிடும் வகையில் சமூகவலைதளத்தில் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மும்பையை சேர்ந்த காஸ்டிங் இயக்குனரான சாகில் அஷ்ரப்அலி செய்யது பாந்திரா மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார்.

அந்த மனுவில் நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி தெரிவித்த கருத்துகள் அவரது மத உணர்வுகளை புண்படுத்தியது மட்டுமில்லாமல், பல கலைஞரின் மனதையும் காயப்படுத்தியதாக கூறியிருந்தார். இதேபோல நடிகையின் சகோதரி இருமதத்தினர் இடையே மோதலை தூண்டும் வகையில் கருத்து கூறியதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மதவாத மோதலை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில் நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த மும்பை போலீசாருக்கு உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகை கங்கனா ரணாவத்தின் அலுவலகத்தை இடிக்க நீதிமன்றம் தடை
நடிகை கங்கனா ரணாவத்தின் அலுவலகத்தை இடிக்க மும்பை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
2. நடிகை கங்கனா ரணாவத் வீட்டின் ஒரு பகுதி இடிப்பு - மும்பை மாநகராட்சி நடவடிக்கை
சட்டவிரோத கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறி மும்பையில் உள்ள நடிகை கங்கனா ரணாவத் வீட்டின் ஒரு பகுதியை மாநகராட்சி நிர்வாகம் இடித்தது.
3. நடிகை கங்கனா ரணாவத் பங்களாவில் நோட்டீஸ் -மும்பை மாநகராட்சி நடவடிக்கையால் பரபரப்பு
நடிகை கங்கனா ரணாவத், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசி இருந்தார்.
4. மும்பையை விமர்சித்த நடிகை கங்கனா ரணாவத்துக்கு பாதுகாப்பு வழங்குவதா? மராட்டிய மந்திரிகள் எதிர்ப்பு
மும்பையை விமர்சித்த நடிகை கங்கனா ரணாவத்துக்கு பாதுகாப்பு வழங்கியதற்கு மராட்டிய மந்திரிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.