செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் முகாம்: காரில் தவற விட்ட 25 பவுன் நகை உரியவரிடம் ஒப்படைப்பு டிரைவருக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு
செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட பொதுமக்கள் காவல் நிலையங்களில் புகார் தெரிவித்து பல நாட்களாக கிடப்பில் போடப்பட்ட பிரச்சினைகளை தீர்த்து கொள்வதற்காக முகாம் நடைபெறுகிறது.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்காக குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட பொதுமக்கள் காவல் நிலையங்களில் புகார் தெரிவித்து பல நாட்களாக கிடப்பில் போடப்பட்ட பிரச்சினைகளை தீர்த்து கொள்வதற்காக முகாம் நடைபெறுகிறது.இம்முகாமில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள போலீஸ் துணை சூப்பிரண்டுகள், உதவி போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டு 1000-க்கும் மேற்பட்ட மனுதாரர்களின் பிரச்சினைகளை தீர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற முகாமில் பொதுமக்கள் மற்றும் போலீசார் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர். இதனிடையே முகாமின் போது, ரேவதி என்ற பெண் குன்றத்தூரில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு வாடகை காரில் சென்ற போது தவற விட்ட 25 பவுன் நகையை மீட்ட கார் ஓட்டுநர் நவீன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இந்நிலையில் முகாம் நடைபெற்ற போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உரியவர்களிடம் 25 பவுன் நகையை ஒப்படைத்தார். மேலும் கார் டிரைவரை அவர் பாராட்டினார்.

Related Tags :
Next Story