எடுத்தனூரில் நடமாடும் ரேஷன் கடை திறப்பு


எடுத்தனூரில் நடமாடும் ரேஷன் கடை திறப்பு
x

எடுத்தனூரில், நடமாடும் ரேஷன் கடை தொடக்க விழா நடைபெற்றது.

ரிஷிவந்தியம்,

ரிஷிவந்தியம் ஒன்றியம் சீர்பனந்தல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் எடுத்தனூர் கிராமத்தில் நடமாடும் ரேஷன் கடை தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு கூட்டுறவு சங்க தலைவர் தண்டபாணி தலைமை தாங்கி, நடமாடும் ரேஷன் கடையை திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணைத்தலைவர் சந்திரசேகரன், செயலாளர் துரைராஜ், துணை செயலாளர் அய்யாசாமி, காசாளர் அண்ணாதுரை, விற்பனையாளர் ஆறுமுகம், இயக்குனர்கள் நடராஜன், விஜயவர்மன், சுரேஷ் மற்றும் ராஜா, கதிர், செல்லப்பன், கோவிந்தசாமி, அரிகிருஷ்ணன், ராமசாமி, தண்டபாணி, ரத்தினவேல், லெனின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story