மாவட்ட செய்திகள்

நாகர்கோவிலில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவிப்பு தளவாய் சுந்தரம் பங்கேற்பு + "||" + In Nagercoil M.G.R. To the idol ADMK party flower parade Participation of Talwai Sundaram

நாகர்கோவிலில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவிப்பு தளவாய் சுந்தரம் பங்கேற்பு

நாகர்கோவிலில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவிப்பு தளவாய் சுந்தரம் பங்கேற்பு
நாகர்கோவிலில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் தளவாய்சுந்தரம் கலந்து கொண்டார்.
நாகர்கோவில்,

அ.தி.மு.க.வின் 49-வது ஆண்டு தொடக்க விழா நேற்று மாநிலம் முழுவதும் கட்சியினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதேபோல் குமரி மாவட்டத்திலும் கட்சியின் நிறுவனர் மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது.


குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாகர்கோவில் வடசேரி சந்திப்பில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன் தலைமை தாங்கினார். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியும், கட்சியின் அமைப்புச் செயலாளருமான தளவாய் சுந்தரம் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், தலைமைக்கழக பேச்சாளர் பி.சி.அன்பழகன், நிர்வாகிகள் பொன்.சுந்தர்நாத், பொன்.சேகர், வினிஸ்டன், நீலபெருமாள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் அங்கு தளவாய்சுந்தரம் பொதுமக்களுக்கும், கட்சியினருக்கும் இனிப்பு வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

1. நாகர்கோவிலில் பஸ் நிறுத்தங்களை சுத்தம் செய்த ராணுவ வீரர்கள் பொதுமக்கள் பாராட்டு
நாகர்கோவிலில் பஸ் நிறுத்தங்களை ராணுவ வீரர்கள் சுத்தம் செய்தனர். இதை பொதுமக்கள் பாராட்டினர்.
2. நாகர்கோவிலில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை - சுவரில் உருக்கமாக எழுதி விட்டு தூக்கில் தொங்கிய பரிதாபம்
நாகர்கோவிலில் குழந்தையில்லாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். வீட்டு சுவரில் உருக்கமான பதிவை எழுதி விட்டு தூக்கில் தொங்கியுள்ளார். இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.
3. நாகர்கோவிலில் பரபரப்பு மும்பையில் இருந்து வந்தவர்கள் ஏறிய பஸ்சை இயக்க டிரைவர் மறுப்பு
மும்பையில் இருந்து வந்தவர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்ல நாகர்கோவில் பஸ்சில் ஏறினர். இதனை அறிந்த டிரைவர் அந்த பஸ்சை இயக்க மறுப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அனைவரும் கொரோனா பரிசோதனைக்கு பிறகு தனிமைப்படுத்தப்பட்டனர்.