மாவட்ட செய்திகள்

தஞ்சை மாவட்டத்தில் போலீசார் அதிரடி சோதனை: புகையிலை பொருட்கள் விற்ற 82 பேர் கைது + "||" + Thanjavur district police raid: 82 arrested for selling tobacco products

தஞ்சை மாவட்டத்தில் போலீசார் அதிரடி சோதனை: புகையிலை பொருட்கள் விற்ற 82 பேர் கைது

தஞ்சை மாவட்டத்தில் போலீசார் அதிரடி சோதனை: புகையிலை பொருட்கள் விற்ற 82 பேர் கைது
தஞ்சை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 82 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய்க்கு தகவல் கிடைத்தது. உடனே அவர், மாவட்டம் முழுவதும் போலீசார் சோதனை நடத்தும்படி உத்தரவு பிறப்பித்தார். அதன்படி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

தஞ்சை வண்டிக்கார தெரு, மேல ராஜ வீதி, பள்ளியக்ரஹாரம் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள கடைகளில் நடத்திய சோதனையில் 10 கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது.

இதேபோல் வல்லம் பகுதியில் 7 கடைகளிலும் , பட்டுகோட்டை பகுதியில் 19 கடைகளிலும், ஒரத்தநாடு பகுதியில் 5 கடைகளிலும், திருவையாறு பகுதியில் 7 கடைகளிலும் தஞ்சை புறநகர் மற்றும் பாபநாசம் பகுதியில் 12 கடைகளிலும், கும்பகோணம் பகுதியில் 9 கடைகளிலும், திருவிடைமருதூர் பகுதியில் 13 கடைகளிலும் என மொத்தம் 82 கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து புகையிலை பொருட் களை விற்பனை செய்த 82 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யபட்டனர்.