மாவட்ட செய்திகள்

அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழா + "||" + ADMK 49th Annual Opening Ceremony

அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழா

அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழா
தூத்துக்குடி மாவட்டத்தில் அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழா நேற்று நடந்தது.
விளாத்திகுளம்,

அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு விளாத்திகுளத்தில் சின்னப்பன் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் பஸ் நிலையம் முன்பு உள்ள எம்.ஜி.ஆர். சிலை மற்றும் காய்கறி மார்க்கெட் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். பின்னர் அ.தி.மு.க. கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.


விழாவில், வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் செல்வராஜ், மாவட்ட அவைத்தலைவர் என்.கே.பெருமாள், விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர்கள் பால்ராஜ் நடராஜன், புதூர் ஒன்றிய செயலாளர்கள் தனஞ்ஜெயன், ஞானகுருசாமி, ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் போடுசாமி, விளாத்திகுளம் ஒன்றிய சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட செயலாளர் கருப்பூர் சீனி, மாவட்ட துணைச்செயலாளர் வெம்பூரார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்துங்கநல்லூர்

கருங்குளம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கட்சியின் 49-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அ.தி.மு.க.வினர் பட்டாசுகள் வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

செய்துங்கநல்லூர் மெயின் பஜாரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கருங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் செங்கான் தலைமையில், கட்சிக் கொடி ஏற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் ராஜேந்திரன், கருங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் உதயசங்கர், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் முஸ்தபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ஒன்றிய பொருளாளர் செந்தாமரை, அவைத்தலைவர் அண்ணாமலை, இளைஞரணி செயலாளர் விஜய உடையார், மாவட்ட பிரதிநிதி திருவரங்கம், முன்னாள் ஊராட்சி செயலாளர் கள்ளாண்டன், கிளை செயலாளர் பேச்சிமுத்து, நிர்வாகிகள் மாசானம், வெங்கடாசலம், இக்பால், கவுன்சிலர் சின்னதுரை, ஊராட்சி கழக செயலாளர் பாலகிருஷ்ணன், ஆறாம்பண்ணை ஐசக், ஆரோக்கியம், எட்வின், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உடன்குடி

உடன்குடி ஒன்றிய, நகர அ.தி.மு.க. சார்பில் உடன்குடி மெயின் பஜாரில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் தாமோதரன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் கோபாலகிருஷ்ணன், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பொன்ஸ்ரீராம், எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் அமிர்தா மகேந்திரன், உடன்குடி நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் ரெங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடன்குடி ஒன்றிய ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் ஜெகதீஷ் இனிப்பு வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி தலைவர் குணசேகரன், ஒன்றிய விவசாய அணி தலைவர் உம்பான் மனோகரன், அண்ணா தொழிற்சங்க மண்டல பொருளாளர் வேல்பாண்டி, ஒன்றிய அண்ணா தொழிற்சங்க செயலாளர் அன்புராஜ், தலைமை பேச்சாளர் மாநாடு பால்துரை, உடன்குடி நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் மூக்கன் பெருமாள், ஆண்டிவிளை முத்துகுமார், சுந்தர், பெனில்ராஜ், செல்லப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக சாமுண்டீஸ்வரி அம்மன் பல்லக்கை இழுத்த கலெக்டர் ரோகிணி சிந்தூரி
நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கலெக்டர் ரோகிணி சிந்தூரி சாமுண்டீஸ்வரி அம்மன் பல்லக்கை இழுத்தார். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
2. நவராத்திரியின் சிகர நிகழ்ச்சி: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பரிவேட்டை திருவிழா
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பரிவேட்டை திருவிழா நேற்று நடந்தது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
3. பாளையங்கோட்டையில் தசரா திருவிழா: 12 அம்மன் கோவில் சப்பரங்கள் பவனி
தசரா திருவிழாவையொட்டி பாளையங்கோட்டையில் நேற்று 12 அம்மன் கோவில்களின் சப்பரங்கள் பவனி நடந்தது.
4. சென்னை கோவில்களில் நவராத்திரி விழா நிறைவு அய்யப்பன் கோவிலில் ஏடு தொடங்கும் நிகழ்ச்சி நடந்தது
சென்னையில் உள்ள கோவில்களில் நடந்து வந்த நவராத்திரி விழா நேற்றுடன் கோலாகலமாக நிறைவடைந்தது. விஜயதசமியையொட்டி அண்ணாமலை நகர் அய்யப்பன் கோவிலில் குழந்தைகளுக்கு ஏடு தொடங்கும் நிகழ்ச்சி நடந்தது.
5. ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா
ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.