மகனுக்கு ஏற்பட்டுள்ள தீவிர உடல்நல குறைவால் கோவிந்த் கார்ஜோளால் கலபுரகிக்கு செல்ல முடியவில்லை எடியூரப்பா தகவல்
கோவிந்த் கார்ஜோள் மகனுக்கு தீவிர உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது, அதனால்தான் கோவிந்த் கார்ஜோளால் கலபுரகிக்கு செல்ல முடியவில்லை என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
பெங்களூரு,
துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோளின் மகனுக்கு தீவிரமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர் தனது மகனை சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு விமானம் மூலம் அழைத்து செல்லும் பணியில் ஈடுபட்டு வந்தார். அதன் காரணமாக அவரால் கலபுரகிக்கு செல்ல முடியவில்லை. அவரை தவிர்த்து மற்ற மந்திரிகள் அனைவரும் பணியாற்றி வருகிறார்கள். சிலர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு சென்று நிவாரண பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
வெள்ள பாதிப்புகள்
நான் 2 நாட்கள் எனது தொகுதியான சிகாரிப்புராவில் தங்கி இருக்க முடிவு செய்துள்ளேன். அதன் பிறகு மீண்டும் பெங்களூரு வருகிறேன். பிறகு வருகிற 21-ந் தேதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்ய உள்ளேன். கர்நாடக வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தியுள்ளார். அவர் எதிர்க்கட்சி தலைவர். எதிர்க்கட்சி தலைவராக அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதில் தவறேதும் இல்லை.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Related Tags :
Next Story