புதிதாக 177 பேருக்கு கொரோனா தொற்று: ஒரே நாளில் 306 பேர் குணமடைந்தனர்


புதிதாக 177 பேருக்கு கொரோனா தொற்று: ஒரே நாளில் 306 பேர் குணமடைந்தனர்
x
தினத்தந்தி 18 Oct 2020 10:23 PM GMT (Updated: 18 Oct 2020 10:23 PM GMT)

புதுவையில் நேற்று புதிதாக 177 பேருக்கு தொற்று உறுதியானது. 306 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் மத்திய நிபுணர்கள் குழு அறிவுறுத்தலின்படி நாள்தோறும் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டு உள்ளது.நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 72 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 177 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. நேற்று ஒரே நாளில் 306 பேர் குணமடைந்துள்ளனர்.

புதுவையில் தற்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதுவரை 2 லட்சத்து 63 ஆயிரத்து 481 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 33 ஆயிரத்து 141 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அவர்களில் 4,277 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். அதாவது 1,558 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 2,719 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 28,290 பேர் குணமடைந்துள்ளனர்.

இறப்பு இல்லை

புதுவையில் இதுவரை 574 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 476 பேர் புதுச்சேரியையும், 52 பேர் காரைக்காலையும், 42 பேர் ஏனாமையும், 4 பேர் மாகியையும் சேர்ந்தவர்கள் ஆவர். கொரோனா தொற்று தீவிரமாக இருந்த போது நாள்தோறும் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வந்தனர். கடந்த சில நாட்களாக ஒற்றை இலக்கத்தில் இறப்பு எண்ணிக்கை பதிவானது.

இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதுவையில் இறப்பு எதுவும் இல்லை. புதுவையில் உயிரிழப்பு 1.73 சதவீதமாகவும், குணமடைவது 85.36 சதவீதமாகவும் உள்ளது.

இந்த தகவலை கொரோனா மருத்துவ ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Next Story