நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Oct 2020 4:42 AM IST (Updated: 19 Oct 2020 4:42 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண்மை மசோதாவை கண்டித்தும், இதை ஆதரிக்கும் மாநில அரசை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் சிவகிரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகிரி,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண்மை மசோதாவை கண்டித்தும், இதை ஆதரிக்கும் மாநில அரசை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் சிவகிரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கருப்பசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வழக்கறிஞர் பாசறை பிரிவு வழக்கறிஞர் ரமேஷ் முன்னிலை வகித்தார். தொகுதி செயலாளர் சீனிவாசன், மாநில இளைஞர் பாசறை செயலாளர் மதிவாணன், பாலசுப்பிரமணியன், ஆனந்தகுமார், பழனி குமார், முத்துவேல், ஜெயராமன், பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story