உத்தமபாளையத்தில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் - தேடும் பணியில் தீயணைப்பு படையினர் தீவிரம்
உத்தமபாளையத்தில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரி மாணவரை தேடும் பணியில் தீயணைப்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
உத்தமபாளையம்,
உத்தமபாளையம் பாறைமேட்டு தெருவை சேர்ந்தவர் அந்தோணிராஜ். கூலித்தொழிலாளி. இவரது மகன் சவரிமுத்து (வயது 20). இவர் தேனியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இந்தநிலையில் சவரிமுத்து நேற்று தனது நண்பர்களுடன் கட்டிட வேலைக்காக பக்கத்து கிராமத்திற்கு சென்றார். பின்னர் வேலை முடிந்து சவரிமுத்துவும், அவரது நண்பர்களும் உத்தமபாளையம் முல்லைப்பெரியாற்று தடுப்பணையில் குளித்தனர். அப்போது ஆற்றின் ஆழமான பகுதிக்கு சவரிமுத்து சென்றதாக தெரிகிறது. ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்கவே அவர் அதில் அடித்து செல்லப்பட்டார். இதற்கிடையே அவரை காணவில்லை என்று நண்பர்கள் தேடி பார்த்துள்ளனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் இதுகுறித்து உடனடியாக உத்தமபாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர், ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சவரிமுத்துவை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் பக்கத்து ஊர்களுக்கு அவர் அடித்து செல்லப்பட்டு இருக்கலாம் என்று தீயணைப்பு படையினர் கருதுகின்றனர். இதனால் சின்னமனூர், மார்க்கையன்கோட்டை, வீரபாண்டி, கோட்டூர் உள்ளிட்ட இடங்களில் சவரிமுத்துவை தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story