மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம்


மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 19 Oct 2020 11:29 AM IST (Updated: 19 Oct 2020 11:29 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது. தர்மபுரி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் இலக்கியம்பட்டியில் நடைபெற்ற விழாவிற்கு கோவிந்தசாமி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். விழாவில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனிசாமி, தர்மபுரி ஒன்றியக்குழு தலைவர் நீலாபுரம் செல்வம், கடத்தூர் ஒன்றிய செயலாளர் மதிவாணன், மாவட்ட அக்ரோ துணைத்தலைவர் மணி, தொழிற்சங்க நிர்வாகி மணி, கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று தர்மபுரி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நடுப்பட்டியில் நடைபெற்ற விழாவுக்கு ஒன்றியக்குழு தலைவரும், ஒன்றிய செயலாளருமான நீலாபுரம் செல்வம் தலைமை தாங்கினார். விழாவில் கோவிந்தசாமி எம்.எல்.ஏ. கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். விழாவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கம், நிர்வாகிகள் சிகாமணி, பெருமாள், குமார் உள்பட கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நல்லம்பள்ளி, அதியமான்கோட்டை ஆகிய இடங்களில் கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் சிவபிரகாசம் தலைமை தாங்கி கட்சி கொடி ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் பூக்கடை முனுசாமி, அரங்கநாதன், கூட்டுறவு வங்கி தலைவர்கள் அம்மாசி, அருவி, தர்மலிங்கம், கிளை செயலாளர் பிரேம்குமார், திருமால்வர்மா, குமார், கொளந்தைசாமி, மூர்த்தி, மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story