கிராம நிர்வாக அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க நிதி கேட்டு பேரக்குழந்தைகளுடன் போராட்டம் நடத்திய மூதாட்டி
கிராம நிர்வாக அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க நிதி கேட்டு பேரக்குழந்தைகளுடன் போராட்டம் நடத்திய மூதாட்டியால் அந்தியூர் தாசில்தார் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அந்தியூர்,
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஆலாம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜோதிமணி (வயது 63). இவருடைய மருமகள் பிரியா. கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி பிரியா இறந்துவிட்டார்.
இதைத்தொடர்ந்து தன் பேரன், பேத்திகளுக்கு வாரிசு சான்றிதழ் கேட்டு ஜோதிமணி அந்தியூர் அருகே உள்ள மாத்தூர் கிராம நிர்வாக அதிகாரியிடம் விண்ணப்பித்து இருந்தார். ஆனால் சான்றிதழ் கிடைக்காமல் தாமதம் ஏற்பட்டது.
லஞ்சம்
இதுகுறித்து ஜோதிமணி மாத்தூர் கிராம நிர்வாக அதிகாரியிடம் கேட்டுள்ளார். அப்போது வாரிசு சான்றிதழ் தரவேண்டும் என்றால் ரூ.3 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று அவர் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு ஜோதிமணி என்னிடம் பணம் இல்லை என்று கூறி வெளியே வந்தார்.
இதைத்தொடர்ந்து ஜோதிமணி நேற்று காலை தன் பேரன், பேத்தியுடன் அந்தியூர் தாசில்தார் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அலுவலக வாசலில் கிராம நிர்வாக அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும். அதற்காக நிதி தாருங்கள் என்று ஒரு பதாகையில் எழுதி தன் பேரன், பேத்தியுடன் தாசில்தார் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
விசாரணை
அந்தியூர் தாசில்தார் அலுவலகத்துக்கு நேற்று பல்வேறு சான்றிதழ்கள் கேட்டு வந்த பொதுமக்கள் ஜோதிமணி போராட்டம் நடத்துவதை பார்க்க அங்கு கூடிவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி அறிந்ததும் அந்தியூர் தாசில்தார் ஜோதிமணியை அலுவலகத்துக்கு வரவழைத்து, விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story