ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியது புதிதாக 90 பேருக்கு நோய் தொற்று
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கி உள்ளது. புதிதாக 90 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஈரோடு,
உலகத்தையே ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாக பரவியது. ஈரோடு மாவட்டத்திலும் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கொரோனா பரவல் அதிவேகமாக காணப்பட்டது. தினமும் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் மொத்த எண்ணிக்கையும் வேகமாக உயர்ந்தது.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொற்று பரவல் சற்று தணிந்து வருகிறது. இதனால் தினமும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைவிட குறைந்து உள்ளது. அதேசமயம் ஈரோடு மாவட்டத்திலும் கொரோனாவின் பாதிப்பு கடந்த 3 நாட்களாக இறங்குமுகமாக உள்ளது.
90 பேர்
இந்தநிலையில் நேற்று வெளியிடப்பட்ட மாநில சுகாதாரத்துறை பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 90 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்து 223 ஆக உயர்ந்தது.
இதேபோல் ஒரேநாளில் 134 பேர் குணமடைந்தார்கள். இதுவரை 8 ஆயிரத்து 112 பேர் கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்டு உள்ளார்கள். தற்போது 998 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்ததாலும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை விட குறைந்து உள்ளது. இதேபோல் கொரோனாவின் தொற்று மேலும் குறைய வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. கொரோனாவுக்கு இதுவரை மொத்தம் 113 பேர் உயிரிழந்து உள்ளனர்.

Related Tags :
Next Story