விவசாயிகளுக்கு கடன் வாங்கி உதவுவது பாவம் அல்ல தேவேந்திர பட்னாவிஸ் சொல்கிறார்


விவசாயிகளுக்கு கடன் வாங்கி உதவுவது பாவம் அல்ல தேவேந்திர பட்னாவிஸ் சொல்கிறார்
x
தினத்தந்தி 20 Oct 2020 2:43 AM IST (Updated: 20 Oct 2020 2:43 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளுக்கு கடன் வாங்கி உதவுவது பாவம் அல்ல என்று தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

மும்பை,

மழை வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட புனே, சோலாப்பூர் மாவட்டங்களில் நேற்று சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் விவசாயிகளை சந்தித்தார்.

அப்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கடன் வாங்கி உதவுவதை தவிர வேறு வழியில்லை என்றும், இது தொடர்பாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை சந்திக்க உள்ளேன் என்றும் சரத்பவார் கூறியது தொடர்பாக தேவேந்திர பட்னாவிசிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-

பாவம் அல்ல

விவசாயிகளுக்கு கடன் வாங்கி உதவுவது பாவம் அல்ல. மேலும் அதுபோன்று முன்னர் நடைபெறாமலும் இல்லை. நிச்சயமாக விவசாயிகளுக்கு அரசு உதவ முன்வர வேண்டும்.

மழை வெள்ளத்தால் பல கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. அங்கு எந்த அதிகாரியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வரவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story