நெல்லையில் கல்லறைகளை சேதப்படுத்தியவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்
நெல்லையில் கல்லறைகளை சேதப்படுத்தியவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று அனைத்து கட்சியினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
நெல்லை,
நெல்லை மறை மாவட்ட கத்தோலிக்க பிஷப் அந்தோணிசாமி தலைமையில் நேற்று முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், அ.தி.மு.க. நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, தி.மு.க. மாவட்ட செயலாளர் அப்துல் வகாப், ஏ.எல்.எஸ்.லட்சுமணன் எம்.எல்.ஏ., காங்கிரஸ் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், ம.தி.மு.க மாவட்ட செயலாளர் நிஜாம், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் காசி விஸ்வநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முன்னாள் மாவட்ட செயலாளர் பழனி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் அலிப் பிலால், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட பொறுப்பாளர் நட்சத்திர வெற்றி, பாதிரியார்கள் ஜியோ, மிக்ஸ், மைபா ஜேசுராஜன், கிப்சன் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகளும், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டர் ஷில்பாவை சந்தித்து மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:-
குண்டர் சட்டம்
நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையில் உடையார்பட்டி திருஇருதய ஆலயத்திற்கு பாத்தியப்பட்ட கல்லறை தோட்டம் உள்ளது. இந்த கல்லறை தோட்டத்தில் கடந்த 17-ந் தேதி இரவில் 10-க்கும் மேற்பட்ட மர்மநபர்கள் சென்று அங்கிருந்த 86-க்கும் மேற்பட்ட கல்லறைகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். மேலும் கல்லறை தோட்டத்தை சுற்றியுள்ள சுவர்களையும் சேதப்படுத்தி உள்ளனர்.
கல்லறைகளை சேதப்படுத்திய மர்மநபர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். மேலும் இந்த சேதங்களுக்காக இழப்பீட்டு தொகை ரூ.30 லட்சத்தை அடுத்த மாதம் (நவம்பர்) 2-ந் தேதிக்குள் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.
முன்னதாக, கல்லறைகளை சேதப்படுத்தியது சம்பந்தமாக நெல்லை உடையார்பட்டியில் உள்ள மண்டபத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

Related Tags :
Next Story