ஸ்ரீவில்லிபுத்தூரில் கோர்ட்டு முன்பு தீக்குளிக்க முயன்ற வாலிபரால் பரபரப்பு


ஸ்ரீவில்லிபுத்தூரில் கோர்ட்டு முன்பு தீக்குளிக்க முயன்ற வாலிபரால் பரபரப்பு
x
தினத்தந்தி 20 Oct 2020 3:45 AM IST (Updated: 20 Oct 2020 9:50 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு முன்பு வாலிபர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசி சாலையில் ஒருங்கிணைந்த கோர்ட்டு உள்ளது. இந்த கோர்ட்டு நுழைவு வாயில் அருகே நேற்று மதியம் சுமார் 12 மணி அளவில் வாலிபர் ஒருவர் கையில் மண்எண்ணெய் கேனுடன் வந்தார்.

அவர் திடீரென மண்எண்ணெயை தனது தலையில் ஊற்றினார். இதனை பார்த்ததும் கோர்ட்டுக்கு வந்திருந்தவர்கள் மற்றும் கோர்ட்டு பணியில் இருந்த போலீசார் ஓடி வந்து மண்எண்ணெய் கேனை தட்டிவிட்டு அவரது தீக்குளிப்பு முயற்சியை தடுத்து நிறுத்தினர்.

பின்னர் அவரை பிடித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் முத்துச்சாமி மற்றும் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கரைவலைந்தான்பட்டியை சேர்ந்த பாலசுப்ரமணியம் (வயது 32) என்பது தெரியவந்தது

அவர் குடும்ப தகராறு காரணமாக தீக்குளிக்க முயன்றதாக கூறப்படுகிறது. எனினும் அவர் எதற்காக தற்கொலைக்கு முயன்றார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோர்ட்டு வளாகம் அருகிலேயே வாலிபர் ஒருவர் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story