தூத்துக்குடியில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி


தூத்துக்குடியில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி
x
தினத்தந்தி 20 Oct 2020 11:38 PM IST (Updated: 20 Oct 2020 11:38 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது.

தூத்துக்குடி,

தமிழகத்தில் கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுறுவல், கடத்தலை தடுக்கும் வகையில் கடலோர பாதுகாப்பு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அவ்வப்போது பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியையும் நடத்தி வருகின்றனர். 6 மாதங்களுக்கு ஒரு முறை ஆபரேசன் ஆம்லா என்னும் ஒத்திகை நிகழ்ச்சியை அனைத்து பாதுகாப்பு பிரிவினருடன் இணைந்து நடத்தி வருகின்றனர்.

ஒத்திகை நிகழ்ச்சி

அதே போன்று மாதம் தோறும் கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்பு போலீசார் இணைந்து ஆபரேசன் சஜாக் என்னும் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன்படி நேற்று பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதனால் தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீசார் தூத்துக்குடி கடல் பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர். தீவுகளில் ஏதேனும் அந்நியர்கள் நடமாட்டம் உள்ளதா? என்பதையும் கண்காணித்தனர். அந்த பகுதியில் வந்த படகுகளிலும் சோதனை நடத்தினர். மீனவர்களின் அடையாள அட்டைகளையும் ஆய்வு செய்தனர்.

மேலும், மீனவ கிராமங்களிலும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். சந்தேகப்படும்படியாக யாரேனும் வந்தால், தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தினர்.

Next Story