மாவட்ட செய்திகள்

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் கொரோனா பாதிப்பு குறைந்தது 67 பேருக்கு மட்டுமே தொற்று + "||" + In Nellai, Tenkasi and Thoothukudi, only 67 people were infected with the corona

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் கொரோனா பாதிப்பு குறைந்தது 67 பேருக்கு மட்டுமே தொற்று

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் கொரோனா பாதிப்பு குறைந்தது 67 பேருக்கு மட்டுமே தொற்று
நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. நேற்று 67 பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டு உள்ளது.
நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்றும் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் 2 பேர் உள்பட 22 பேருக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர்கள் பணியாற்றிய இடத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் 69 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். முதியவர் ஒருவர் இறந்துள்ளார்.


நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 936-ஆக உள்ளது. இவர்களில் 13 ஆயிரத்து 235 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 495 பேர் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். 206 பேர் இறந்துள்ளனர்.

தென்காசியில் 8 பேர்

தென்காசி மாவட்டத்தில் நேற்று 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் இதுவரை 7 ஆயிரத்து 748 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சை முடிந்து 7 ஆயிரத்து 453 பேர் வீடு திரும்பி உள்ளனர். 144 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 151 பேர் இறந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 37 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 576-ஆக உள்ளது. இதில் 13 ஆயிரத்து 897 பேர் முழுமையாக குணமடைந்து உள்ளனர். மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடுகளில் 553 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 126 பேர் இறந்து உள்ளனர். இந்த 3 மாவட்டங்களிலும் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோடு மாவட்டத்தில் 48 பேருக்கு கொரோனா; முதியவர் பலி
ஈரோடு மாவட்டத்தில் 48 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மேலும் முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்.
2. அரியலூரில் 5 பேருக்கு கொரோனா பெரம்பலூரில் பாதிப்பு இல்லை
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று யாரும் புதிதாக கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை.
3. அரியலூரில் 4 பேருக்கு கொரோனா பெரம்பலூரில் 2 பேர் பாதிப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஆலத்தூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 2 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
4. கொரோனாவை தடுப்பதற்கு ஒற்றை ‘டோஸ்’ தடுப்பூசி கண்டுபிடிப்பு
கொரோனாவை தடுப்பதற்கு ஒற்றை ‘டோஸ்’ தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
5. சூர்யாவின் வாடிவாசல் படம் கைவிடப்பட்டதா? படக்குழு விளக்கம்
கொரோனா காரணமாக வாடிவாசல் படம் கைவிடப்பட்டு விட்டதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது.