மாவட்ட செய்திகள்

பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் ரூ.25 லட்சம் குட்கா பறிமுதல் லாரி டிரைவர் கைது + "||" + At the Pallikonda customs Rs 25 lakh Gutka confiscated Truck driver arrested

பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் ரூ.25 லட்சம் குட்கா பறிமுதல் லாரி டிரைவர் கைது

பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் ரூ.25 லட்சம் குட்கா பறிமுதல் லாரி டிரைவர் கைது
பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்புள்ள குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். டிரைவரும் கைது செய்யப்பட்டார்.
அணைக்கட்டு,

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் மற்றும் போலீசார் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி சென்ற கன்டெய்னர் லாரியை நிறுத்தி டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.


அப்போது அவர் மதுரை உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த அழகுராஜா (வயது 28) என்பதும், சென்னையில் உள்ள பார்சல் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு பார்சல் கொண்டு செல்லும்படி லாரியின் உரிமையாளர் கூறியதால், பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கன்டெய்னர் லாரியில் எடுத்துச் செல்வதாக கூறினார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் லாரியின் பின்பக்க கதவை திறந்து பார்த்தபோது பார்சல் பெட்டிகள் இருந்தது.

300-க்கும் மேற்பட்ட பார்சல் பெட்டிகளில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது. அவற்றையும், லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.