மாவட்ட செய்திகள்

களியக்காவிளை அருகே ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Near Kaliyakkavilai Hang the teacher Suicide

களியக்காவிளை அருகே ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை

களியக்காவிளை அருகே ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை
களியக்காவிளை அருகே ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு.
களியக்காவிளை,

களியக்காவிளை அருகே உள்ள மலையடி கோயில்விளையை சேர்ந்த ஜாண்சன் மகள் ஜாஸ்மின் (வயது 35). இவருக்கும் மார்த்தாண்டம் ஞாறான்விளை பகுதியைச் சேர்ந்த ஆசிர் ஜெபசிங் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உண்டு. ஆசிர் ஜெபசிங் வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார்.


ஜாஸ்மின் களியக்காவிளை பகுதியிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இதனால் ஜாஸ்மின் தனது பெற்றோரின் வீடான மலையடியில் தங்கியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று வீட்டின் அறையில் இருந்த ஜாஸ்மின் வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கதவை திறந்து பார்த்த போது ஜாஸ்மின் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது.

இது குறித்து பளுகல் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜாஸ்மின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.