மாவட்ட செய்திகள்

ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சி.ஐ.டி.யூ. மின் ஊழியர் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - திருவாரூரில் நடந்தது + "||" + Ask contract workers to work permanently CITU Electrical Workers' Union Demonstration - In Thiruvarur

ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சி.ஐ.டி.யூ. மின் ஊழியர் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - திருவாரூரில் நடந்தது

ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சி.ஐ.டி.யூ. மின் ஊழியர் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - திருவாரூரில் நடந்தது
மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி திருவாரூரில் சி.ஐ.டி.யூ. மின்ஊழியர் மத்திய தொழிற் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவாரூர்,

திருவாரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. மின்ஊழியர் மத்திய தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் திட்ட தலைவர் சகாயராஜ் தலைமை தாங்கினார். இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் துணைத்தலைவர்கள் சுப்பிரமணியன், ராமசாமி, திட்ட செயலாளர் ராஜேந்திரன், கோட்ட தலைவர்கள் முரளிதரன், மோகனசுந்தரம், கோட்ட செயலாளர்கள் வீரபாண்டியன், தமிழரசன், திட்ட பொருளாளர் ஜெயசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஒப்பந்த ஊழியர்கள் அனைவருக்கும் மின் வாரியமே தினக்கூலியாக ரூ.380 வழங்க வேண்டும். ஊதியம் இல்லாமல் பணி புரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் பகுதி நேர பணியாளர்கள் உள்பட அனைவருக்கும் போனஸ் மற்றும் கருணை தொகை வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.