சங்கரன்கோவில் அருகே ஆட்டின ஆராய்ச்சி மையம் அமையும் இடத்தை அமைச்சர் ராஜலட்சுமி ஆய்வு
சங்கரன்கோவில் அருகே ஆட்டின ஆராய்ச்சி அமையும் இடத்தை, அமைச்சர் ராஜலட்சுமி ஆய்வு செய்தார்.
சங்கரன்கோவில்,
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் 110-வது விதியின் கீழ் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஆட்டின ஆராய்ச்சி மையம், வட்டார போக்குவரத்து அலுவலகம், வேளாண் உணவு பூங்கா, சிப்காட் ஆகியவை அமைத்திட உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த அலுவலகங்கள் அமைக்க சங்கரன்கோவிலை அடுத்த சின்னகோவிலான்குளம் கிராமத்தின் அருகே ஊத்துமலை செல்லும் சாலையில் சுமார் 285 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது.
இதில் வேளாண் உணவு பூங்கா அமைக்க 10 ஏக்கர் இடமும், வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்க 5 ஏக்கர் இடமும், சிப்காட் அமைத்திட 60 ஏக்கர் இடமும், ஆட்டின ஆராய்ச்சி மையம் அமைக்க 80 ஏக்கர் இடமும் தேர்வு செய்யப்பட்டது.
அமைச்சர் ஆய்வு
தேர்வு செய்யப்பட்ட இடங்களை நேற்று அமைச்சர் ராஜலட்சுமி, மாவட்ட கலெக்டர் அருண்சுந்தர் தயாளன் ஆகியோர் ஆய்வு செய்தனர். சங்கரன்கோவில் உதவி கலெக்டர் முருகசெல்வி, வட்டார போக்குவரத்து அலுவலர் சிங்காரவேலன், கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் கலையரசி மற்றும் நெல்லை கால்நடை ஆராய்ச்சி மைய கல்லூரி போராசிரியர்கள், அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story