மாவட்ட செய்திகள்

வேப்பூர் அருகே புதுப்பெண் திடீர் சாவு தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது + "||" + Near Veppur Sudden death of a new girl Incited to suicide Husband arrested

வேப்பூர் அருகே புதுப்பெண் திடீர் சாவு தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது

வேப்பூர் அருகே புதுப்பெண் திடீர் சாவு தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது
வேப்பூர் அருகே புதுப்பெண் திடீரென இறந்தார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய கணவரை போலீசார் கைது செய்தனர்.
வேப்பூர்,

வேப்பூர் அருகே வரம்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் சபரிநாதன். இவருக்கும் விருத்தாசலம் பூந்தோட்டம் நகரை சேர்ந்த சங்கீதா என்பவருக்கும் கடந்த 45 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. மேலும் சங்கீதாவிடம் சபரிநாதன் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.


இந்த நிலையில் வீட்டில் இருந்த சங்கீதா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலின் பேரில் வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சங்கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து சங்கீதாவின் தாயார் ஜெயந்தி விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகம் மற்றும் வேப்பூர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் தனது மகளிடம் வரதட்சணை கேட்டு சபரிநாதன் கொடுமைப்படுத்தி வந்தார். இந்த நிலையில் எனது மகள் இறந்துள்ளார். எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து சபரிநாதனை வேப்பூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வேப்பூர் அருகே சாப்பாடு ருசியாக இல்லாததால் பெண் அடித்துக் கொலை கணவர் கைது
வேப்பூர் அருகே சாப்பாடு ருசியாக இல்லை என்று கூறி பெண்ணை அடித்துக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.