தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் ஆவினில் புதிய இனிப்பு வகைகள் - கலெக்டர் ராமன் அறிமுகப்படுத்தினார்


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் ஆவினில் புதிய இனிப்பு வகைகள் - கலெக்டர் ராமன் அறிமுகப்படுத்தினார்
x
தினத்தந்தி 22 Oct 2020 4:11 PM GMT (Updated: 22 Oct 2020 4:11 PM GMT)

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் ஆவினில் தயாரிக்கப்பட்ட புதிய இனிப்பு வகைகளை கலெக்டர் ராமன் அறிமுகப்படுத்தினார்.

சேலம்,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் ஆவினில் தயாரிக்கப்பட்ட புதிய இனிப்பு வகைகள் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு சேலம் ஆவின் தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். இதில் கலெக்டர் ராமன் கலந்து கொண்டு புதிய இனிப்பு வகைகளான பாம் ஜாக்கரி பிரீமியம் மோதி பாக், மில்லட் டிரீட், பாம் ஜாக்கரி, ராகி லட்டு மற்றும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பனீர் ஆகியவற்றை அறிமுகப்படுத்தி வைத்தார்.

பின்னர் இதுகுறித்து கலெக்டர் ராமன் கூறியதாவது:-

சேலம் ஆவினில் தரமாகவும், தூய்மையாகவும், சுகாதாரமான முறையில் நல்ல சுவையுடன் இனிப்பு வகைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிக்கைக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இனிப்பு வகைகளை பொதுமக்கள் குறைந்த விலையில் அதிகம் வாங்கி பயன்படுத்திட வேண்டும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இனிப்பு வகைகளுடன் சேர்ந்து பால்கோவா, மில்க் கேக், மைசூர்பா, ஸ்பெஷல் முந்திரி கேக் போன்ற இனிப்புகளும் அனைத்து ஒன்றிய ஆவின் பாலகங்கள், தனியார் ஆவின் பாலகங்கள் மற்றும் முகவர்கள், மொத்த விற்பனை முகவர்கள் ஆகியோரிடம் கிடைக்கும். இந்த ஆண்டு விற்பனை இலக்காக 30 டன் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், ஆவின் பொது மேலாளர் நர்மதாதேவி, ஆவின் துணைத்தலைவர் ஜெகதீசன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் மல்லிகா வையாபுரி (சேலம்) , ராஜூ (சேலம் மேற்கு), வையாபுரி (சேலம் கிழக்கு), துணைப்பதிவாளர் (பால்வளம்) சண்முகநதி, துணை பொது மேலாளர் (பால் கொள்முதல் மற்றும் கால்நடை பராமரிப்பு) வசந்தகுமார், உதவி பொதுமேலாளர் (விற்பனை) பிரவீணா மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் விஸ்வநாதன், பரமசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story