மாவட்ட செய்திகள்

உடன்குடியில் மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பலி மாடு குறுக்கே வந்ததால் பரிதாபம் + "||" + It is a pity that a young man was killed when his motorcycle collided with a tree in Udankudi

உடன்குடியில் மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பலி மாடு குறுக்கே வந்ததால் பரிதாபம்

உடன்குடியில் மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பலி மாடு குறுக்கே வந்ததால் பரிதாபம்
உடன்குடியில், மாடு குறுக்கே வந்ததால் மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபர் மரத்தில் மோதி பரிதாபமாக இறந்தார்.
உடன்குடி, 

சாத்தான்குளம் அருகே உள்ள அறிவான்மொழியை சேர்ந்தவர் முருகேசன். அவருடைய மனைவி சக்திகனி. இவர்கள் இருவரும் சென்னையில் உள்ளனர். இவர்களுடைய 2-வது மகன் பிரவீன்குமார் (வயது 19). இவர் நேற்று காலை புதிய மோட்டார் சைக்கிளில் குலசேகரன்பட்டினத்தில் இருந்து உடன்குடியை நோக்கி வந்துகொண்டிருந்தார். உடன்குடி வில்லிகுடியிருப்பு சந்திப்பு அருகே சென்றபோது மாடு ஒன்று திடீரென ரோட்டின் குறுக்கே பாய்ந்தது. இதனால் பிரவீன்குமார் பிரேக் போட்டபோது மோட்டார்சைக்கிள் நிலை தடுமாறி ரோட்டின் கரையில் நின்ற பூவரசம் மரத்தில் மோதியது.

பரிதாப சாவு

இதில் மோட்டார்சைக்கிள் சுக்கு நூறாக நொருங்கியது. பிரவீன் குமார் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதிகாகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பிரவீன் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மணிகண்டம் அருகே சாலையின் தடுப்புச்சுவரில் கார் மோதி கவிழ்ந்ததில் விவசாயி பலி
மணிகண்டம் அருகே சாலையின் தடுப்புச்சுவரில் கார் மோதி கவிழ்ந்ததில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார். பிறந்த குழந்தை உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
2. வேப்பந்தட்டை அருகே தொடர்மழை: வீட்டுச்சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவி பலி
வேப்பந்தட்டை அருகே தொடர் மழையினால் வீட்டுச்சுவர் இடிந்து விழுந்ததில் தாய் கண் முன்னே பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தாள்.
3. கீழப்பழுவூர் அருகே வீட்டின் முன்பு அறுந்து கிடந்த மின்கம்பியை அகற்ற முயன்ற மூதாட்டி பலி
கீழப்பழுவூர் அருகே வீட்டின் முன்பு அறுந்து கிடந்த மின்கம்பியை அகற்ற முயன்ற மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
4. மங்களமேட்டில் மரத்தில் வேன் மோதி கவிழ்ந்தது; பெண்கள் உள்பட 11 பேர் படுகாயம்
மங்களமேட்டில் மரத்தில் வேன் மோதி கவிழ்ந்ததில் பெண்கள் உள்பட 11 பேர் படுகாயமடைந்தனர்.
5. வடமதுரை அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து தம்பதி பலி
வடமதுரை அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் கணவன்-மனைவி பரிதாபமாக இறந்தனர்.