பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் பி.எஸ்.என்.எல்.அலுவலகம் முன்பு ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் பி.எஸ்.என்.எல்.அலுவலகம் முன்பு ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 1.1.2017 முதல் 15 சதவீத உயர்வுடன் கூடிய ஓய்வு ஊதிய மாற்றத்தை காலதாமதமின்றி வழங்க வேண்டும். ஒன்றரை ஆண்டுகளாக கிடப்பில் உள்ள ஓய்வூதியர்களுக்கான மருத்துவ பில் தொகையை உடனடியாக பட்டுவாடா செய்ய வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மருத்துவ அலவன்ஸ் ஆயிரம் ரூபாயை மாதந்தோறும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஓய்வூதியர் சங்க கிளை தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். அகில இந்திய துணைத் தலைவரும், தமிழ்மாநில உதவி தலைவருமான மோகன் தாஸ் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். கிளைச் செயலாளர் முத்துராமலிங்கம், கிளைத் தலைவர் ஆறுமுகம், மாவட்ட அமைப்பு செயலாளர் பரமசிவம், கிளை பொருளாளர் திருவட்டபோத்தி, சஞ்சார் நிகாம் அதிகாரிகள் சங்க கிளை செயலாளர் கோலப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர்.
முன்னதாக பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்கத்தின் பன்னிரண்டாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு கோவில்பட்டி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு அகில இந்திய துணைத் தலைவர் மோகன்தாஸ் கொடி ஏற்றினார்.
Related Tags :
Next Story