மாவட்ட செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் 80 பேருக்கு கொரோனா ஒருவர் பலி + "||" + Corona kills 80 in Erode district

ஈரோடு மாவட்டத்தில் 80 பேருக்கு கொரோனா ஒருவர் பலி

ஈரோடு மாவட்டத்தில் 80 பேருக்கு கொரோனா ஒருவர் பலி
ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 80 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மேலும் கொரோனாவுக்கு ஒருவர் பலியாகி உள்ளார்.
ஈரோடு, 

ஈரோடு மாவட்டத்தில் தற்போது கொரோனாவின் தாக்கம் குறைய தொடங்கி உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தினந்தோறும் 100 முதல் 180 பேர்வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர். தற்போது கொரோனா பாதிப்பு 80 முதல் 130 பேர் வரை உள்ளது.

இதற்கிடையில் ஈரோடு மாநகர் பகுதியை சேர்ந்த 64 வயது முதியவர் ஒருவர் காய்ச்சல் மற்றும் சளி தொல்லை காரணமாக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் முதியவர் இறந்தார். இதனால் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்தது.

80 பேருக்கு தொற்று

மேலும் நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 459 ஆக உயர்ந்து உள்ளது.

அதேநேரத்தில் நேற்று மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 111 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு சென்றனர். இதுவரை மொத்தம் 8 ஆயிரத்து 476 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 867 பேர் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சி: தமிழகத்தில் அமலானது புதிய கட்டுப்பாடுகள்
தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த ஊரடங்கானது இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமலில் இருக்கும்.
2. குன்றத்தூர் பேரூராட்சியில் ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா தொற்று
குன்றத்தூர் பேரூராட்சியில் ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
3. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு ஒரே நாளில் ஆயிரத்தை நெருங்கியது 6 பேர் உயிரிழப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 970 பேர் பாதிக்கப்பட்டனர்.
4. ஒரே நாளில் 2 லட்சத்து 73 ஆயிரம் பேருக்கு தொற்று இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1½ கோடியை தாண்டியது
இந்தியாவில் கொரோனா மொத்த பாதிப்பு 1½ கோடியை தாண்டியது. ஒரே நாளில் 2 லட்சத்து 73 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக 1,619 பேர் பலியாகி உள்ளனர்.
5. தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி, கேரளாவிலும் இரவு நேர ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வருகிறது
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி, கேரளாவிலும் இரவு நேர ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

அதிகம் வாசிக்கப்பட்டவை