புனேயில் தடையை மீறி தாண்டியா நடனம் 3 பேர் மீது வழக்குப்பதிவு


புனேயில் தடையை மீறி தாண்டியா நடனம் 3 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 23 Oct 2020 3:28 AM IST (Updated: 23 Oct 2020 3:28 AM IST)
t-max-icont-min-icon

புனேயில் தடையை மீறி தாண்டியா நடனத்துக்கு ஏற்பாடு செய்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

புனே, 

கொரோனா தொற்று பரவல் காரணமாக நவராத்திரி விழாவில் கொண்டாடப்படும் தாண்டியா, கர்பா போன்ற நடனங்களுக்கு மாநில அரசு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் புனே அலிந்தி பகுதியில் உள்ள சொசைட்டியில் தடையை மீறி தாண்டியா நடனம் நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர். இதில் 15 முதல் 20 பேர் சேர்ந்து நடனம் ஆடியது தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு சென்று தாண்டியா நடனத்தை ரத்து செய்தனர்.

வழக்குப்பதிவு

மேலும் இது தொடர்பாக போலீசார் நடனத்திற்கு ஏற்பாடு செய்த சொசைட்டியை சேர்ந்த 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல அருகே உள்ள பிம்பிரி சிஞ்ச்வாட் கமிஷனரக பகுதியில் தாண்டியா, கர்பா நடனம் முற்றிலுமாக தடை செய்யப்பட்டு இருப்பதாக மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

Next Story