நீதித்துறையை அவமதித்ததாக நடிகை கங்கனா ரணாவத் மீது கோர்ட்டில் வழக்கு


நீதித்துறையை அவமதித்ததாக நடிகை கங்கனா ரணாவத் மீது கோர்ட்டில் வழக்கு
x
தினத்தந்தி 23 Oct 2020 3:50 AM IST (Updated: 23 Oct 2020 3:50 AM IST)
t-max-icont-min-icon

நீதிதுறையை அவமதித்ததாக நடிகை கங்கனா ரணாவத் மீது வக்கீல் ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

மும்பை, 

நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி இரு சமூகத்தினர் இடையே மோதலை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்ததாக பாந்திரா கோர்ட்டில் காஸ்டிங் இயக்குனர் முனாவர் அலி செய்யது மனுதாக்கல் செய்து இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு இருசமூகத்தினர் இடையே மோதலை தூண்டும் வகையில் பேசியதாக வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து போலீசார் கங்கனா மற்றும் அவரது சகோதரி மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

வக்கீல் மனு

இதற்கிடையே அலி காசிப் கான் தேஷ்முக் என்ற வக்கீல் அந்தேரி மெட்ரோபாலிட்டன் மாஜி்ஸ்திரேட்டு கோர்ட்டில் கங்கனாவுக்கு எதிராக கிரிமினல் புகார் ஒன்றை தாக்கல் செய்து உள்ளார். அந்த புகாரில் நடிகை கங்கனா மீது கோர்ட்டு வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்ட பிறகு நீதித்துறையை அவமதிக்கும் வகையில் கெட்ட நோக்கத்துடன் டுவிட்டர் பதிவிட்டு உள்ளார். அவர் நீதித்துறையை கேலி பொருளாக்கி உள்ளதாகவும் புகாரில் கூறியுள்ளார்.

வக்கீலின் புகாா் குறித்து அந்தேரி கோர்ட்டு அடுத்த மாதம் 10-ந் தேதி விசாரணை நடத்த உள்ளது.

Next Story