மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைக்கும் காலம் நெருங்கி கொண்டிருக்கிறது மு.க.ஸ்டாலின் பேச்சு + "||" + DMK in Tamil Nadu MK Stalin's speech that the time for forming a regime is approaching

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைக்கும் காலம் நெருங்கி கொண்டிருக்கிறது மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைக்கும் காலம் நெருங்கி கொண்டிருக்கிறது மு.க.ஸ்டாலின் பேச்சு
‘தமிழகத்தில், தி.மு.க. ஆட்சி அமைவதற்கான காலம் நெருங்கி கொண்டிருக்கிறது’ என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சங்கரன்கோவில், 

தி.மு.க. மாநில வர்த்தகர் அணி துணைத்தலைவர் அய்யாத்துரை பாண்டியனின் ஏ.வெங்கடேஷ் குமார் நினைவு அறக்கட்டளை சார்பில் சங்கரன்கோவில் ஏ.வி.கே. கல்வி குழும வளாகத்தில் மாபெரும் இலவச வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. முகாமை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வழியாக தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்த நாட்டில் இப்போது எது பஞ்சமாக இருக்கிறது என்றால் வேலைக்குத் தான் பஞ்சமாக இருக்கிறது. மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பவர்கள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தோற்று விட்டார்கள். ஏற்கனவே இருந்த நிறுவனங்களைக் காப்பாற்றுவதிலும் அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள்.

அனைவரும் படிக்க வேண்டும், அனைவரும் வேலைக்குப் போக வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பைப் பெறுவதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் பேதம் இருக்கக் கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம்தான் திராவிட இயக்கம்.

கருணாநிதி ஆட்சியின் இலக்கணம்

1920-ம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சி தமிழகத்தில் தொடங்கியது. அதனுடைய தொடர்ச்சிதான் அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை என்பதை தன்னுடைய ஆட்சியின் இலக்கணமாக கருணாநிதி வைத்துக் கொண்டார். தமிழகத்தில் ஏராளமான பள்ளிக்கூடங்களைத் திறந்தது காமராஜர் என்றால், ஏராளமான கல்லூரிகளை திறந்து வைத்தவர் கருணாநிதி தான்.

ஐ.டி.க்கு எனத் தலைமைச் செயலகத்தில் தனித்துறையை 1998-ம் ஆண்டு உருவாக்கினார். முதல்-அமைச்சர் தலைமையில் ஐ.டி டாஸ்க் போர்ஸ் உருவாக்கினார். இந்தியாவிலேயே முதன்முதலாக ஐ.டி பாலிசியை தமிழகம் தான் உருவாக்கியது. அரசுத்துறையை கம்ப்யூட்டர் மயமாக்க முனைந்தார். பள்ளிக் கல்வியில் தகவல் தொழில்நுட்பத்தை இணைத்தார். தமிழ் மென்பொருளை உருவாக்கிப் பரப்ப முனைந்தார். ரூ.340 கோடியில் டைடல் பார்க்கை 2000-ம் ஆண்டில் கட்டினார். கிண்டி முதல் கேளம்பாக்கம் வரை சைபர் காரிடார் அமைத்தார். சிறுசேரியில் வன்பொருள் மென்பொருள் பூங்கா அமைத்தார். தரமணி முதல் பழைய மாமல்லபுரம் வரையிலான சாலையை ஐ.டி நெடுஞ்சாலை ஆக்கினார்.

காலம் நெருங்கி கொண்டிருக்கிறது

இதுபோல பல திட்டங்களை செய்தவர் கருணாநிதி. இத்தகைய கருணாநிதி அரசு (தி.மு.க. ஆட்சி) இடைவெளி இல்லாமல் தொடர்ந்து இருந்தால் தமிழகத்தின் இளைய சக்தி இன்னும் தீவிரமாகச் செயல்பட்டு இருக்கும். அதற்கான காலம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சிக்கு நெல்லை மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவபத்மநாதன், வெங்கடேஷ்குமார் நினைவு அறக்கட்டளை அறங்காவலர்கள் அல்லிராணி, டாக்டர் சரண்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளை நிறுவனர் அய்யாத்துரை பாண்டியன் வரவேற்றார். தனுஷ்குமார் எம்.பி. உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 50 தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டன. வேலைவாய்ப்புக்காக 5 ஆயிரம் இளைஞர்களும், பெண்களும் கலந்து கொண்டனர். நேற்று ஒரே நாளில் 1,500 பேருக்கு வேலை உறுதி கடிதம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. தெரு வியாபாரிகளுக்கான கடனுதவி முகாமில் பிரதமர் படத்தை பா.ஜ.க.வினர் விளம்பர பேனரில் ஒட்டியதால் பரபரப்பு
மயிலாடுதுறையில் நடந்த தெரு வியாபாரிகளுக்கான கடனுதவி முகாமில் பிரதமர் படத்தை பா.ஜ.க.வினர் விளம்பர பேனரில் ஒட்டி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது
2. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்: 44,786 விண்ணப்பங்கள் குவிந்தன
திருப்பூர், மாவட்டத்தில் வாக்குசாவடி மையங்களில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 44,786பேர் விண்ணப்பித்துள்ளனர்.
3. மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 16,682 பேர் விண்ணப்பம்
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 16,682 பேர் விண்ணப்பம் செய்து உள்ளனர்.
4. மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்
மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் நடைபெற்றது.
5. வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த பணி சிறப்பு முகாம்: ஒரே நாளில் 12 ஆயிரம் பேர் விண்ணப்பம்
வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தப்பணியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 12 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்.