மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை அருகே பிளஸ்-1 மாணவி மர்மச்சாவு மரத்தில் தூக்கில் தொங்கினார் + "||" + Near Thiruvannamalai Plus-1 student Mysterious death Hung on to hang on the tree

திருவண்ணாமலை அருகே பிளஸ்-1 மாணவி மர்மச்சாவு மரத்தில் தூக்கில் தொங்கினார்

திருவண்ணாமலை அருகே பிளஸ்-1 மாணவி மர்மச்சாவு மரத்தில் தூக்கில் தொங்கினார்
திருவண்ணாமலை அருகே பிளஸ்-1 மாணவி மர்மமான முறையில் மரத்தில் தூக்கில் பிணமாக கிடந்தார்.
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருகில் உள்ள கிளிபட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் ரம்யா (வயது 16). இவர் பிளஸ்-1 படித்து வந்தார். சம்பவத்தன்று இரவு சுமார் 7.30 மணியளவில் வீட்டில் இருந்த ரம்யா கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வெளியே சென்று உள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் ரம்யாவை பல இடத்தில் தேடியுள்ளனர்.


அப்போது ரம்யா அந்த பகுதியில் உள்ள ஒருவரின் நிலத்தில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தி ரம்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.