தூத்துக்குடியில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஒப்பாரி போராட்டம்


தூத்துக்குடியில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஒப்பாரி போராட்டம்
x
தினத்தந்தி 23 Oct 2020 6:33 PM GMT (Updated: 2020-10-24T00:03:53+05:30)

தூத்துக்குடியில், வெங்காய விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வலியுறுத்தி நேற்று ஜனநாயக மாதர் சங்கத்தினர் வெங்காய மாலை அணிந்து ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் அண்ணாநகர் 7-வது தெருவில் வெங்காயம் மாலை அணிந்தபடி ஒப்பாரி வைத்து நூதன போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பூமயில் தலைமை தாங்கினார்.

போராட்டத்தில் வெங்காயம் விலை உயர்வால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஆகையால் வெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அப்போது பெண்கள் கழுத்தில் வெங்காய மாலை அணிந்து, ஒப்பாரி வைத்தனர்.

கலந்து கொண்டவர்கள்

போராட்டத்தில் மாநகர தலைவர் காளியம்மாள், செயலாளர் சரோஜா, மாவட்ட குழு உறுப்பினர்கள் சரசுவதி, ஜெயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story