ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா
ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.
ஈரோடு,
மொடக்குறிச்சி ஒன்றியம் குளுர், 46 புதூர், கஸ்பாபேட்டை, துய்யம்பூந்துறை உள்ளிட்ட ஊராட்சிகளில் ரூ.2 கோடியே 21 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பிலான சாக்கடை தடுப்பு சுவர் உள்பட பல்வேறு வளர்ச்சிதிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கான பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் மொடக்குறிச்சி வி.பி.சிவசுப்பிரமணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வளர்ச்சி திட்ட பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
விழாவில் மொடக்குறிச்சி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கதிர்வேல், ஒன்றியக்குழு துணைத்தலைவர் மயில் என்கிற சுப்பிரமணி, ஊராட்சி தலைவர்கள் பிரகாஷ் (46புதூர்), செல்வராஜ் (குளுர்), சித்ரா அர்ச்சுணன் (கஸ்பாபேட்டை), சரண்யா (கனகபுரம்), பேபி (துய்யம்பூந்துறை), ஒன்றியக்குழு உறுப்பினர் ராணி பழனிச்சாமி, வட்டார வளர்ச்சி அதிகாரி சுசீலா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அம்மாபேட்டை
அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சென்னம்பட்டி ஊராட்சியில் மருந்து கடை முதல் ஆட்டோ நிறுத்தம் வரையில் வடிகால் அமைத்தல், பாப்பாத்தி காட்டுப்புதூர் ஊராட்சியில் வடிகால், கான்கிரீட் தளம் உள்பட மொத்தம் ரூ.10 லட்சம் மதிப்புள்ள வளர்ச்சி திட்ட பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அந்தியூர் தொகுதி இ.எம்.ஆர்.ராஜா என்கிற ராஜாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். இதில் அம்மாபேட்டை ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் வி.எஸ்.சரவணபவா, ஊராட்சி மன்ற தலைவர்கள் சித்ரா செல்வன் (சென்னம்பட்டி), சம்பத் (பாப்பாத்தி காட்டுப்புதூர்), விஜயா ராமு (கொமராயனூர்), மாவட்ட கவுன்சிலர் மோகனசுந்தரம், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் கே.ராதா, அன்பழகன், வட்டார வளர்ச்சி அலுவலர் அ.சக்திவேல் உள்பட கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி அடுத்த தேசிபாளையம் ஊராட்சி தச்சு பெருமாள் பாளையம், விண்ணப்பள்ளி ஊராட்சி எரப்ப நாயக்கன்பாளையம் பகுதியில் ரூ.13 லட்சம் செலவில் தரைமட்ட தொட்டி அமைத்து குடிநீர் வழங்கும் பணிக்கான தொடக்க விழா நடைபெற்றது. பவானிசாகர் எஸ்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. விழாவில் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். விண்ணப்பள்ளி ஊராட்சி தலைவர் ஜெயமணி கணேசன், மாவட்ட கவுன்சிலர் தங்கராஜ், பவானிசாகர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் வி.ஏ.பழனிச்சாமி, ஒன்றிய குழு உறுப்பினர் பூங்கொடி முத்துச்சாமி, பவானிசாகர் பேரூர் செயலாளர் வாத்தியார் துரைசாமி, அ.தி.மு.க நிர்வாகிகள் மயில்சாமி, முருகேசன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டார்கள். முன்னதாக நடமாடும் ரேசன் கடைகள் தொடக்க விழா கிரியப்பம்பாளையம், கக்காலன்குட்டை, பாச்சாமல்லனூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.
Related Tags :
Next Story