புனேயில் ரூ.52 கோடி ஜி.எஸ்.டி. மோசடி செய்தவர் கைது


புனேயில் ரூ.52 கோடி ஜி.எஸ்.டி. மோசடி செய்தவர் கைது
x
தினத்தந்தி 23 Oct 2020 9:10 PM GMT (Updated: 2020-10-24T02:40:48+05:30)

புனேயில் ரூ.52 கோடி ஜி.எஸ்.டி. மோசடியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை, 

புனேயில் துஷார் முனோத் என்பவர் ஜி.எஸ்.டி. மோசடியில் ஈடுபட்டதை ஜி.எஸ்.டி. அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து அதிகாாிகள் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலி நிறுவனங்கள் மூலம் ரூ.52.19 கோடி ஜி.எஸ்.டி. மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

அவர் பொருட்கள் எதுவும் வாங்காமல், வாங்கியது போல போலி ரசீது தயார் செய்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

விசாரணை

கைது செய்யப்பட்ட துஷார் முனோத் உள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். கோர்ட்டு அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இந்த மோசடியில் சம்மந்தப்பட்ட மேலும் சில நிறுவனங்கள் குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story