மாவட்ட செய்திகள்

கார் மீது அரசு பஸ் மோதி விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 4 பேர் பலி + "||" + Government bus collides with car, killing 4 people, including women from the same family

கார் மீது அரசு பஸ் மோதி விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 4 பேர் பலி

கார் மீது அரசு பஸ் மோதி விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 4 பேர் பலி
கார் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகினர்.
கோலாப்பூர், 

மராட்டிய மாநிலம் கன்காவ்லியில் இருந்து கோலாப்பூர் நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் காகன்பாவ்டா ரோடு அடுர் கிராமம் அருகே வந்தபோது, எதிரே காலே கிராமம் நோக்கி சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் இருந்த பூஜா மால்வே(வயது36), சஞ்சய் மால்வே(43), கிரண் மால்வே(24) அல்காத்தி மால்வே(60) ஆகியோர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.

ஒரே குடும்பத்தினர்

இது பற்றி தகவல் அறிந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியானவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியானவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

இது குறித்து கர்வீர் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்திற்கு காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் காகன்பவ்டா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. கடந்த 2 ஆண்டுகளில் ரெயில் விபத்துகள் கணிசமாக குறைந்துள்ளன: மத்திய மந்திரி பியூஷ் கோயல்
‘‘கடந்த 2 ஆண்டுகளில் இந்தியாவில் ரெயில் விபத்துகள் கணிசமாக குறைந்துள்ளன’’, என்று மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
2. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தொடக்க கல்வி இயக்கக அலுவலகத்தில் தீ விபத்து
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தொடக்க கல்வி இயக்கக அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
3. மணலி அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதி விபத்து; கல்லூரி மாணவர் பலி; டிரைவர் கைது
மணலி அருகே மோட்டார் சைக்கிள் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக பலியானார்.
4. மெக்சிகோவில் பெட்ரோல் டேங்கர் லாரி மீது பஸ் மோதி விபத்து; 11 பேர் உடல் கருகி பலி
மெக்சிகோ நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள நியூவோ லியோன் மாகாணத்தின் தலைநகர் மான்டேரியில் இருந்து பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.
5. ஸ்ரீபெரும்புதூரில் பழுதாகி நின்ற கார் மீது லாரி மோதி 2 பேர் பலி
ஸ்ரீபெரும்புதூர் அருகே பழுதாகி நின்ற கார் மீது லாரி மோதி 2 பேர் பலியானார்கள்.