உள்ளாட்சி தேர்தல் மூலம் பெண்களுக்கு முக்கியத்துவம் கவர்னர் கிரண்பெடி நம்பிக்கை


உள்ளாட்சி தேர்தல் மூலம் பெண்களுக்கு முக்கியத்துவம் கவர்னர் கிரண்பெடி நம்பிக்கை
x
தினத்தந்தி 23 Oct 2020 10:48 PM GMT (Updated: 23 Oct 2020 10:48 PM GMT)

உள்ளாட்சி தேர்தல் மூலம் பெண்களுக்கு முக்கியத்துவம் கிடை க்கும் என்று கவர்னர் கிரண்பெடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி, 

புதுவையில் 10 ஆண்டுகள் தாமதமான நிலையில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. பஞ்சாயத்து மற்றும் நகர்ப்புற தேர்தல்களை நடத்தியபின் மக்கள் உள்ளூர் பிரச்சினை களை தீர்க்க போதுமான ஆதாரங்கள் இருக்கும். அவர்கள் சொந்த காரணங் களுக்காக ஒன்றிணைந்து செயல்பட தயாராக வேண்டும். அனைத்து சேவை களையும் சிறப்பாக நிர்வகிப்பதை உறுதி செய்வதற் கான ஆதாரங்கள் உங்களி டமே உள்ளது.

மக்களால் தேர்ந் தெடுக்கப் பட்ட உள்ளாட்சி அமைப்பு களை வைத்தி ருந்தால் அந்த அமைப்புகளுக்கு மத்திய அரசு நிதி அளிக்கிறது. இதன் மூலம் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் தங்கள் பகுதி களில் உள்ள மக்களுக்கு என்ன தேவை இருக்கிறது என்பதை முன்னதாகவே திட்டமிட முடியும். இந்த அடித்தள அமைப்பில் 3-ல் ஒரு பங்கினை பெண்கள் பெறுவார்கள். இது புதுச்சேரியின் ஆட்சியில் வியத்தகு மாற்றமாகும்.

பெண்களின் தலைமை

புதுவை அமைச்சரவையில் தற்போது பெண்களுக்கு இட மில்லை. பஞ்சாயத்து தேர்தல் களுக்கு பிறகு புதுச்சேரியின் திட்டமிடல் மற்றும் முடி வெடுக்கும் செயல்முறைகளில் பெண் களின் முக்கியத்துவம் இருக்கும்.

உள்ளூர் நிர்வாகத்தில் உள்ளாட்சித்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் கலெக்டர் ஆகியோர் இணைந்து செயல்பட்டு எதிர் காலத்தில் ஏற்பட வேண்டிய மாற்றம் குறித்து மக் களுக்கு தெரியப்படுத்த வேண் டும். புதுச்சேரியில் பெண்கள் தலைமை முன்னணிக்கு வரும். அவர்களின் எதிர்கால வாழ்விற்கு தயார்படுத்த தொடங்குங்கள். அது உள்ளூர் நிர்வாகத்தை சரியான செயல்பாட்டு அமைப்பில் வைக்கும்.

செழிப்பான புதுச்சேரி

சுப்ரீம் கோர்ட்டு உத் தரவின்பேரில் நீதிமன்றங்கள் உள்ளூர் சுய அரசாங்கத்தை உறுதி செய்துள்ளன. எந்த வொரு தாமதமும் இல்லாமல் தேர்தல்களை செயல்படுத்த எங்களுக்கு சட்ட வழி காட்டுதல் உள்ளது. தலைமை செயலாளர் தலைமையிலான குழு மற்றும் இந்திய அரசாங் கத்தால் முறையாக ஆதரிக் கப்படும் குழு மூலம் தேர்தல் நடத்த அனுபவம் வாய்ந்த மூத்த அதிகாரியை பெற்றுள் ளோம்.

கவர்னரின் அலுவலகம் தனது பொறுப்புகளை நிறைவேற்றி, சட்டப் பூர்வமாகவும், சரியாகவும் நடப்பதை உறுதிசெய்ய அதன் சட்ட பங்கை கொண்டுள்ளது. இந்த மாற்றத்தை நாம் இப்போது விரைவாக புரிந்துகொள்ள வேண்டும். மேலும் வரும் மாதங்களில் சரியான வேட்பாளர்களை அடையாளம் கண்டு தேர்ந்தெடுப்பதற்கு மக்கள் தயாராக இருக்கவேண்டும். எனவே ஒரு செழிப்பான புதுச்சேரியை நாம் உறுதி செய்வோம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story