மாவட்ட செய்திகள்

கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கின + "||" + Water from Krishnapuram Dam flooded the causeways

கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கின

கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கின
கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கின.
பள்ளிப்பட்டு, 

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே ஆந்திர மாநிலம் அம்மபள்ளி கிராமத்தில் கிருஷ்ணாபுரம் அணை உள்ளது. தற்போது அணை உள்ள பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து அதிகப்படியாக வரும் தண்ணீரை திறந்து விட ஆந்திர மாநில அதிகாரிகள் முடிவு செய்தனர். மதியம் 2 மணி அளவில் அணையில் இருந்து 900 கன அடி தண்ணீரை திறந்துவிட அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இது வழக்கமான தண்ணீரை விட 3 மடங்கு அதிகம் ஆகும். இது குறித்து அவர்கள் தமிழக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து எச்சரிக்கை விடுத்தனர். உடனே வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இதுகுறித்து கொசஸ்தலை ஆற்றங்கரையோரம் உள்ள கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்து தரைப்பாலங்களை கடக்க வேண்டாம் என்று எச்சரித்தனர்.

900 கனஅடி தண்ணீர் திறப்பு

மேலும் கொசஸ்தலை ஆற்றில் தரைப்பாலம் உள்ள கீழ்கால்பட்டடை, சாமந்தவாடா, நெடியம் ஆகிய பகுதிகளில் தரைப்பாலங்கள் அருகே பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கி நடக்காமல் இருக்க போலீசாரை காவலுக்கு ஏற்பாடு செய்தனர். கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து மதியம் 2 மணிக்கு அணையின் 2 ஷர்ட்டர்கள் திறக்கப்பட்டு 900 கன அடி தண்ணீர் கொசஸ்தலை ஆற்றில் விடப்பட்டது.

இதனால் ஆற்றில் அதிக அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளம் பள்ளிப்பட்டு பகுதியை மதியம் 3 மணி அளவில் கடந்தது.

இதனால் நெடியம், சாமந்தவாடா, கீழ்கால் பட்டடை போன்ற பகுதிகளில் கொசஸ்தலை ஆற்றில் உள்ள தரை பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. அந்த பகுதிகளில் பொதுமக்கள் யாரும் தரைப்பாலத்தை கடக்காமல் இருக்க தடுப்புகள் அமைத்து போலீசார் பொதுமக்களை தடுத்து திருப்பி அனுப்பினர்.

தொடர்புடைய செய்திகள்

1. அன்னவாசல், இலுப்பூர் பகுதிகளில் மழையினால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
தொடர் மழையினால் அன்னவாசல், இலுப்பூர் பகுதிகளில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதற்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2. நாகை மாவட்டத்தில் 4-வது நாளாக கன மழை: மல்லியனாற்றின் கரை உடைந்து 300 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின
நாகை மாவட்டத்தில் 4-வது நாளாக கன மழை பெய்தது. இதனால் மல்லியனாற்றின் கரை உடைந்து 300 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. நாகூர் தர்கா குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது
3. கறம்பக்குடி, அறந்தாங்கி, நெடுவாசல் பகுதிகளில் மழையினால் நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின
கறம்பக்குடி, அறந்தாங்கி, நெடுவாசல் பகுதிகளில் தொடர் மழையினால் நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
4. டெல்டாவில், 2 நாட்களாக இடைவிடாது கொட்டி தீர்த்த கனமழை ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின
டெல்டாவில், 2 நாட்களாக இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் இந்த மழையினால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். இதன் காரணமாக சாலைகளில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமலும், வாகன போக்குவரத்து இல்லாமலும் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
5. ‘புரெவி’ புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் கடல் கடும் சீற்றம்; 4 படகுகள் தண்ணீரில் மூழ்கின
‘புரெவி’ புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் நேற்று கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் நாகை கடுவையாற்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4 படகுகள் தண்ணீரில் மூழ்கின.

அதிகம் வாசிக்கப்பட்டவை