மாவட்ட செய்திகள்

தாயில்பட்டி அருகே, அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவர் கைது + "||" + Near Thailpatti, a person who made firecrackers without permission was arrested

தாயில்பட்டி அருகே, அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவர் கைது

தாயில்பட்டி அருகே, அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவர் கைது
தாயில்பட்டி அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவரை போலீசார் கைது செய்தனர்.
தாயில்பட்டி,

தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த லட்சுமி நகரில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதாக வெம்பக்கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து தாயில்பட்டி, லட்சுமி நகர், வடக்கு தெரு ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் சோதனை நடத்தினார்.

அப்போது லட்சுமி நகரில் சோதனை நடத்திய போது சண்முககனி (வயது 45) என்பவரது வீட்டில் 25 கிலோ பட்டாசுகள் அனுமதியின்றி தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார், சண்முக கனியை கைது செய்தனர். மேலும் தாயில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசு உற்பத்தி நடைபெறுகிறதா? என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.