விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Oct 2020 9:40 AM IST (Updated: 25 Oct 2020 9:40 AM IST)
t-max-icont-min-icon

மனுதர்ம நூலில் பெண்களை இழிவு செய்யும் கருத்துக்கள் இடம் பெற்றிருப்பதாகவும், மனுதர்ம நூலை தடை செய்யக்கோரியும் மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருச்சி, 

மனுதர்ம நூலில் பெண்களை இழிவு செய்யும் கருத்துக்கள் இடம் பெற்றிருப்பதாகவும், மனுதர்ம நூலை தடை செய்யக்கோரியும் மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணைச் செயலாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழாதன், மாநில நிர்வாகிகள் அரசு, தங்கதுரை மற்றும் திராவிடர் கழகத்தினர், மக்கள் அதிகாரம் அமைப்பினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, மனுதர்ம நூலை தடை செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story