கள்ளக்குறிச்சியில், மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்துலக மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் மற்றும் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் சாந்தி தலைமை தாங்கினார். செயலாளர் ஆறுமுகம், துணை செயலாளர் கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
100 நாள் வேலை திட்டத்தில் 55 வயதுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை இல்லை என்ற ஆணையை ரத்து செய்ய வேண்டும், அரசாணை 52-ன் படி 4 மணி நேர வேலைக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு முழு ஊதியமாக ரூ.256 வழங்க வேண்டும், தொடர்ந்து 100 நாள் வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை மறுக்கும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளை கண்டித்தும் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். போராட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் வேலு, செயற்குழு உறுப்பினர் அஞ்சலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story