தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் தொகையை குறைக்க கூடாது - ஜான்பாண்டியன் பேட்டி
தோட்டதொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் தொகையை குறைக்க கூடாது என்று ஊட்டியில் நடந்ததொழிற்சங்க விழாவில் ஜான்பாண்டியன் கூறினார்.
ஊட்டி,
ஊட்டியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக அமைப்புசாரா தொழிற்சங்க தொடக்கவிழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட செயலாளர் சிவா தலைமை தாங்கினார்.
தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் ஜான் பாண்டியன் கலந்து கொண்டு தொழிற்சங்க கொடியை ஏற்றி தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-.
ஏழை,எளிய தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அமைப்புசாரா தொழிற்சங்கம் தொடங்கப்பட்டுள்ளது.
எந்த தொழிற்சங்கங்களுக்கும் எதிராக தொடங்கவில்லை.
நீலகிரி மாவட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு போனஸ் விரைவாக வழங்க வேண்டும். பல காரணங்களைக் கூறி தோட்ட நிர்வாகங்கள் தீபாவளி போனஸ் தொகையை குறைக்க கூடாது.
7 உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிடக்கோரி குன்னூரில் நாளை (இன்று) போராட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் யாருடன் கூட்டணி என்ற கேள்விக்கு ஜான்பாண்டியன் கூறும்போது, செயற்குழு, பொதுக்குழு கூட்டி முடிவு செய்யப்படும் என பதிலளித்தார்.
நிகழ்ச்சியில் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story