விழுப்புரத்தில் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மானியத்துடன் வேளாண் எந்திரங்கள் அமைச்சர் வழங்கினார்


விழுப்புரத்தில் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மானியத்துடன் வேளாண் எந்திரங்கள் அமைச்சர் வழங்கினார்
x
தினத்தந்தி 26 Oct 2020 3:36 AM GMT (Updated: 26 Oct 2020 3:36 AM GMT)

விழுப்புரத்தில் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மானியத்துடன் வேளாண் எந்திரங்கள், கருவிகளை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வேளாண்மை இயந்திர மயமாக்கும் திட்டத்தின் கீழ் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மானியத்துடன் கூடிய வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் சக்கரபாணி, முத்தமிழ்செல்வன், கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் பழனிவேல் அனைவரையும் வரவேற்றார்.

அமைச்சர் வழங்கினார்

நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு 3 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.3 கோடியே 23 லட்சத்து 66 ஆயிரத்து 617 மதிப்பில் மானியத்துடன் கூடிய வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், விழுப்புரம் மாவட்டம், உணவு உற்பத்தியில் தமிழக அளவில் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. மாவட்டத்தின் மொத்த விவசாயிகளில் 96 சதவீதம் சிறு, குறு விவசாயிகளாக உள்ளதால் அவர்கள் சாகுபடி பணிகளை காலத்தே செய்திட தங்கள் பகுதிக்கு தேவையான டிராக்டர், மினி டிராக்டர், சுழல் கலப்பை, நெல் நடவு எந்திரம், கதிரடிக்கும் எந்திரம் மற்றும் இதர வேளாண் எந்திரங்களை குழுக்களின் மூலம் கொள்முதல் செய்து விவசாய உற்பத்தியை பெருக்கி சிறு மற்றும் குறு விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்றார்.

இதில் வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர்கள் ரவீந்திரன், குருமூர்த்தி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், சுரேஷ்பாபு, எசாலம்பன்னீர், மாவட்ட மாணவர் அணி செயலாளர் சக்திவேல், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைத்தலைவர் வண்டிமேடு ராமதாஸ், கூட்டுறவு அச்சக துணைத்தலைவர் பிரஸ்குமரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செங்குட்டுவன், நகர ஜெயலலிதா பேரவை நிர்வாகி கோல்டுசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story