பெலகாவி டவுனில் பயங்கரம்: ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வீட்டில் ரவுடி படுகொலை - 8 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
பெலகாவி டவுனில், ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி வீட்டில் வைத்து ரவுடியை கொலை செய்த 8 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
பெலகாவி,
பெலகாவி டவுன் மாலமாருதி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் ஷபாஸ் பதான் என்கிற ஷபாஸ் (வயது 24) . ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் மாலமாருதி போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர் ஒருவரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு, ஷபாஸ் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது 4 மோட்டார் சைக்கிள்களில் வந்த 8 பேர் கும்பல் ஷபாஸ் சென்ற மோட்டார் சைக்கிள் மீது தாங்கள் சென்ற மோட்டார் சைக்கிள்களால் மோதினர். இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து ஷபாஸ் கீழே விழுந்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் 8 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து ஷபாசை தாக்கினர். இதனால் அவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ஆனாலும் அவரை 8 பேரும் விரட்டி, விரட்டி சென்று ஆயுதங்களால் தாக்கினர்.
இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஒருவரது வீட்டிற்குள் ஷபாஸ் நுழைந்தார்.ஆனாலும் 8 பேரும் போலீஸ் அதிகாரியின் வீட்டிற்குள் நுழைந்து ஷபாசை தொடர்ந்து ஆயுதங்களால் தாக்கினர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினர் அந்த கும்பலை தடுக்க முயன்றனர். ஆனாலும் அந்த கும்பல் ஷபாசை ஆயுதங்களால் தாக்கி கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டது. இந்த கொலை சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி மாலமாருதி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் கொலையான ஷபாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெலகாவி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதன்பின்னர் சம்பவம் நடந்த வீட்டிற்கு வந்த மோப்ப நாய் அங்கிருந்து சிறிது தூரம் மோப்பம் பிடித்து ஓடி நின்றது. ஆனால் அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதையடுத்து அங்கு வந்த கைரேகை நிபுணர்கள், வீட்டில் பதிவாகி இருந்த 8 பேர் கும்பலின் கைரேகைகளை பதிவு செய்து கொண்டு அவற்றை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் சம்பவம் நடந்த வீட்டிற்கு பெலகாவி மாநகர போலீஸ் கமிஷனரும் நேரில் வந்து பார்வையிட்டார். மேலும் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியிடமும் அவர் விசாரித்தார். ஷபாசை கொலை செய்தது யார்? என்ன காரணத்திற்காக கொலை நடந்தது? என்பது போலீசாருக்கு உடனடியாக தெரியவில்லை. முன்விரோதம் காரணமாக கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இந்த கொலை சம்பவம் குறித்து மாலமாருதி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
இந்த நிலையில் ஷபாசை, 8 பேர் கும்பல் ஆயுதங்களால் விரட்டி, விரட்டி வெட்டும் காட்சிகள் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளன. அந்த காட்சிகளின் அடிப்படையில் கொலையாளிகளை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர். போலீஸ் அதிகாரி வீட்டில் ரவுடி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெலகாவியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story