திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 109 பேருக்கு கொரோனா சிகிச்சை பலனின்றி ஒருவர் சாவு


திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 109 பேருக்கு கொரோனா சிகிச்சை பலனின்றி ஒருவர் சாவு
x
தினத்தந்தி 27 Oct 2020 6:14 AM IST (Updated: 27 Oct 2020 6:14 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 109 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி ஒருவர் பலியாகியுள்ளார்.

திருப்பூர், 

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சராசரியாக 100 என்ற அளவில் குறைந்துவருகிறது. மாவட்ட நிர்வாகத்தின் தீவிர நடவடிக்கை காரணமாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இறங்கு முகமாகவே காணப்படுகிறது.

நேற்று மாவட்டத்தில் 109 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் இதுவரை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 188 ஆக உயர்ந்துள்ளது.

180 பேர் பலி

நேற்று 114 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 11 ஆயிரத்து 31 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். தற்போது 977 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

திருப்பூரைச் சேர்ந்த 60 வயது ஆண் கடந்த 20-ந் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது.

Next Story