துணை முதல்-மந்திரி அஜித்பவாருக்கு கொரோனா ஆஸ்பத்திரியில் அனுமதி
துணை முதல்-மந்திரி அஜித்பவாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
மும்பை,
கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மராட்டியத்தில் ஏற்கனவே 14 மந்திரிகள் தொற்று நோய்க்கு ஆளாகி இருந்தனர். அவர்கள் அனைவரும் குணமடைந்து விட்டனர். கடந்த சனிக்கிழமை கொரோனாவால் பாதிக்கப்பட்ட முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில் மராட்டிய துணை முதல்-மந்திரியும், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான அஜித்பவார் கொரோனா தொற்றால் நேற்று பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜித்பவாருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு கடந்த வியாழக்கிழமை செய்யப்பட்ட பரிசோதனையில் தொற்று பாதிப்பு எதுவும் இல்லாத நிலையில், மீண்டும் எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் அஜித்பவாரின் குடும்பத்தினருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர்கள் யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது.
கொரோனாவுக்கு ஆளாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ள அஜித்பவார் கூறியிருப்பதாவது:-
நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். டாக்டரின் ஆலோசனையின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தான் ஆஸ்பத்திரியில் சேர்ந்து உள்ளேன். எனது உடல்நலம் குறித்து ஆதரவாளர்கள், மக்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். சில நாள் ஓய்வுக்கு பிறகு உங்கள் மத்தியில் வருவேன். இவ்வாறு அவர் கூறினார்.
மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறுகையில், “கொரோனாவால் பாதிக்கப்பட்ட அஜித்பவார் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார். வீட்டில் இருந்தால் போன் அழைப்புகள் அதிக அளவில் வரும். அவரால் ஓய்வு எடுக்க முடியாது என்பதால் தான் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார்” என்றார்.
அஜித்பவார் விரைவாக குணமடைய பிரார்த்தனை செய்வதாக ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து மீண்ட வீட்டு வசதி மந்திரி ஜிதேந்திர அவாத் டுவிட்டர் பதிவில் தெரிவித்து இருக்கிறார்.

Related Tags :
Next Story